Full description not available
B**N
Thgazhi is an amazing author. Real classic
Excellent book. Bold enough to bring out the inhuman way a section of the people were treated. How they fought back after generations is well presented. A must read book
S**N
தோட்டியின் மகன் தோட்டியின் மகனாகவே இருக்க வேண்டுமா ?
சோளகர் தொட்டி நாவலிற்குப் பிறகு மனதை கசக்கி பிழிந்த நாவல். நாவலின் காலம் மலையாளத்தில் 1947 இந்தியாவின் சுதந்திரமான ஆண்டில் வெளிவந்திருக்கிறது. இந்தியாவை அடிமைப்படுத்திய நாகரீக சமூகமெனும் ஆங்கிலேயர்கள் படிப்பை கொடுத்தான், நாகரீகத்தை கொடுத்தான் என்ற புனைவுருவாக்க வரலாறு இருந்தாலும் மிகப் பெரிய மலம் அள்ளும் சமூகத்தை உருவாக்கி இந்திய விடுதலையான போது அதை அப்படியே கடத்தி விட்டிருந்தது.இந்த நாவலை பேசும் முன் அந்த சமூகத்தையும், அவர்கள் செய்த அந்த பணியையும் நேரில் கண்ட உயிர் சாட்சியான தலைமுறையிலிருந்து வந்திருக்கிறேன்.80 களில் 8 வயதாக இருக்கும் போது இந்த மாதிரியான கழிப்பறை பயன்படுத்தும் படியாகவே நகரங்கள் இருந்தது. அதில் திராவிட பெரியாரிய கம்யூனிச மண்களும் விலக்கல்ல.அப்போது எங்கள் இடத்தில் அந்த பணியை செய்தவர்கள் மூவருமே பெண்கள். மாராக்கா, லட்சுமி, இன்னொரு பெயர் நினைவில் இல்லை. ஏன் பெயர்கள் கூட நினைவிலிருக்கிறது என்று நினைப்பதாக நினைக்கிறேன். ஆம் அவர்கள் எங்கள் வீட்டு வாசலில் தான் ஓய்வெடுப்பார்கள். அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் அங்கே ஓர் மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். 11 மணி வரை வேலை அதன் பிறகு சிறிய உறக்கம் மதிய உணவு உண்ட பிறகு அவர்கள் கிளம்பி விடுவார்கள்.கதையில் வருவது போல மிகவும் தீண்டத்தகாதவர்களாய் பார்த்த ஞாபகம் இல்லை. அத்துனை அருவருப்பான வேலை தான். அவாகள் செய்தார்கள் சில நேரம் திட்டிக் கொண்டே செய்தார்கள். அவர்கள விடுமறையோ போராட்டமோ செய்த நேரம் நரகல் நிரம்பி வழியும் நகர மெங்கும்.இக் கொடுமையான அநீதி 90களின் பிற்காலத்தில் படிப்படியாக நீக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் மலத்தை தூய்மை படுத்தும் தொழிலானது 2013 வரை இரயில் நிலையங்களில் நிற்கும் இரயில் வண்டிகளிலிருந்து அசிங்கம் செய்யும் அசுத்தத்தை மனிதர்கள் மூலம்தான் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இன்றும் மலக்குழியில் இறங்கி மரணச் செய்திகளை படித்து கொண்டிருக்கிறோம்.இப்படியான சமூக ஒடுக்கு முறை எப்போதிருந்து தொடங்கப் பட்டது என்ற வரையறையை சுடலைமுத்துவின் அறியாமையைப் பயன்படுத்தி ஆசிரியர் மறைத்திருப்பதாகவே என் தோணல். வாசித்தப் பிறகான என் அனுபவம் நிச்சயம் இது நாள் வரை வந்த அரசாங்கங்கள், நான், நீங்கள் எல்லாரும் சேர்ந்தே இச்சமூகத்திற்கு பெரும் அநீதியை இழைத்து வந்திருக்கிறோம் என்பதே.அடுத்ததாக இக்கதையின் இறுதியில் ஏற்படும் இடதுசாரிகளின் ஆதிக்கம் தோட்டிகளுக்கு வழங்கிய சமூக நீதியானது முழுச் சம்பளம் மட்டும்தான் அதைத் தாண்டி அவர்களுக்கும் பெரிய மாற்றம் வேண்டும் என்ற எண்ணமில்லை என்பதே.தோட்டியின் மகன் தோட்டியின் மகனாகவே தான் இருக்க வேண்டுமா என்ற சுடலைமுத்து வின் ஆதங்கத்திற்கு செவிசாய்க்கும் மானிடப் பிறவிகள் தோன்றிவிட்டார்களா என்ன?2024 ல் என் மனது சொல்லும் வெட்கமான பதில் இல்லை என்பதே.தமிழ் நடை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. எங்கும் தொய்வில்லை. இந்நாவலை ஒரு சமூக வட்டத்திற்குள் என்னால் தள்ள முடியவில்லை.பாரதம் சுதந்திரம் காண்பதற்கு முன்பாகதேசப்பிதாவின் பார்வையிலிருந்து“I may not be born again but if it happens, I will like to be born into a familyof scavengers, so that I may relieve them of the inhuman, unhealthy, andhateful practice of carrying night soil.”-Mahatma Gandhi.
S**R
Good Read
முதலில் இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்த நண்பர்களுக்கு நன்றி. நமது சமூகத்தில் துப்புரவு தொழிலாளர் பற்றிய இத்தனை வெளிப்படையான எழுத்தை இதுவரை படித்ததில்லை. படிக்கவே இவ்வளவு சிரமமாக இருந்தது என்றால், இத்தகைய வேலையில் தானும் ஈடுபட்டு, தனக்குப் பிறகு இந்த வேலையில், தனது அடுத்த தலைமுறையையும் ஈடுபடுத்தும் ஒரு தொழிலாளியின் உருக்கமான கதையாக தொடங்குகிறது.தகழி சிவசங்கரப் பிள்ளை மலையாளததில் 1946ல் எழுதிய இந்த நாவலை தமிழில் 6 ஆண்டுகள் கழித்து, தனது 21 வயதில் மொழி பெயர்த்தவர், சுந்தர ராமசாமி. அந்த வேளையில், சு.ரா தான் தமிழில் பெரிய அளவில் எதையும் அச்சிட்டு வெளியிடவில்லை என்ற முன்னுரையோடு தொடங்கி இருக்கிறார்.கேரளத்தில் இடதுசாரி சிந்தனைகள் மேலோங்கி நிற்கும் முக்கிய மையமான, ஆலப்புழையின் பின்புலத்தில் தொடங்கும் நாவல், தகழியின் இடதுசாரி சிந்தனையையும், அதன்மீது தான் கொண்ட ஆழ்ந்த அக்கறையையும் வெளிப்படையாக அறிவிக்கின்றன. இந்நூல் எழுதப்பட்ட அன்றைய காலகட்டத்தில், 'தோட்டி' என்ற தலைப்பே பல்வேறு விவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது.மனிதர்களை மனிதர்களாக மதிக்காத சமூகத்தையும், ஆண்களை ஆண்களாக மதிக்காத அந்த சமூகத்தின் பெண்களையும் பற்றி கவலை கொள்ளும் துப்புறவு தொழிலாளர்கள் மத்தியில், தன்னிடமிருந்து முழுவதுமாக வேலையை மட்டும் வாங்கி விட்டு, அதற்கான கூலி எவ்வளவு என்று கூட தெரியாமல் பார்த்துக் கொள்ளும் ஓவர்சீயரை நினைத்து ஆதங்கம் தொனிக்கின்றது. வேலையில், ஏதேனும் தவறு நிகழ்ந்து விட்டால், அதற்கு அபராதம் வேறு..!!!இப்படி ஒவ்வொரு நாளும் நசுங்கும் ஒரு வாழ்வை, தனக்கு நேர்ந்த இந்த நிலையை எண்ணி வருந்துகிறான் சுடலைமுத்து. தனக்குப் பின் தனது அடுத்த தலைமுறை இந்தத் தோட்டி வேலைக்கு செல்லக் கூடாது என தீர்மானிக்கிறான். அதற்காக தான் வாழ்வையே அற்பணித்தும் பயனற்றுப் போகிறது காலத்தின் கட்டாயம். சுடலைமுத்து-வள்ளி இடையேயான பேச்சு வரிகள் மூலம் தொட்டிகளில் இருந்து தனித்து நிற்க வேண்டும் என்ற ஆதங்கம் அவனுக்கு இருப்பதையும், பின்னாட்களில், அவனால் அதை செய்ய முடியாது என வலுவின்றி நிற்கும்போதும், பெரிதும் கவனம் ஏற்கிறது, தோட்டிகளின் துயரம்.செய்யும் தொழிலாலும், கேள்வி கேட்காமல் இருப்பதாலும், தோட்டி என்ற நிலையில் இருந்து மீள முடியாமல் வாடும் மக்களுக்கு மத்தியில் இருந்து, ஒரு தோட்டியின் மகன், பிற்காலத்தில் தனக்குப் பின்னால் மக்களை இணைத்துப் போராடும் சக்தியாக உருவெடுக்கிறான். இது அவர்களை அவர்களின் குறைந்த பட்ச உரிமையை மட்டுமின்றி, மனிதனை மனிதனாக வாழ முடியும் என்ற நம்பிக்கை ஊட்டுகிறது.தகழியின் எழுத்துக்களையும், அவருடைய அதே தணியாத கோபத்தை தனது இளம்பிராய எழுத்துக்களால் தமிழுக்குக் கொண்டு வந்த சுந்தர ராமசாமியையும் நினைவுகூர்ந்து வாசிக்க வேண்டிய புத்தகம்.Sankar.T.A.B,Ahmedabad.
B**I
Humans are scavengers.
Vivid account of reality and human suffering...the first few pages (giving accounts of the profession and food habits) is really disturbing...and the continuum is the shame...
A**R
Five Stars
VERY GOOD - A N BHASKAR
Trustpilot
3 days ago
1 month ago